ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். 

Last Updated : Dec 7, 2017, 04:27 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!! title=

ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். 

இந்த இடைத்தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி கடந்த டிசம்பர் 5-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.

இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். 

Trending News