இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ் நிராகரிப்பு - அரசின் புது அப்டேட்டுக்கு பாராட்டு

இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 13, 2022, 03:11 PM IST
  • இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ்
  • சான்றிதழ் நிராகரிப்புக்கான காரணங்கள்
  • தமிழக அரசின் அப்டேட்டுக்கு பாராட்டு
இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ் நிராகரிப்பு - அரசின் புது அப்டேட்டுக்கு பாராட்டு  title=

சேலத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கடந்த 2021ல் இறந்தபிறகு வாரிசு சான்றிதழ் கோரி அவரது தாயார் சின்னப்பிள்ளை அரசின் இ-சேவை மூலம் விண்ணப்பித்தார். ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வட்டாட்சியர் பெயரில் வழங்கப்பட்ட உத்தரவில் "விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தவர், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவாக அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 

legal heir certificate

நேரடியாக வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்ட காரணங்களுக்காக சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்று நிராகரிக்கப்படும் உத்தரவுகள் விளக்கமாக அளிக்கப்படும் என்றும், தற்போதுள்ள இ- சேவை முறையில் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,இந்த நடைமுறைச் சிக்கலைத் தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

Highcourt

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.என்.சி. கௌசிக் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு அரசு இ-சேவை மூலமாக வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும்போது, அதற்கான காரணங்களை 100 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற வரையறையை 1000 எழுத்துக்கள் என மாற்றி அமைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுந்தது. இந்த நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | காணொளி காட்சி விசாரணை- பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞர்..!

இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்த நீதிபதி அனிதா சும்ந்த் நீதிமன்ற கருத்தினை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சடலத்துடன் ஓரினச்சேர்க்கை - சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News