பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார்

RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2024, 04:34 PM IST
  • ஜெயலலிதா பெயரை ஏன் பயன்படுத்துறீங்க?
  • உங்கள் கட்சியில் தலைவர்கள் இல்லையா?
  • அண்ணாமலைக்கு ஆர்பி உதயக்குமார் சரமாரி கேள்வி
பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார் title=

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதியை சேர்ந்த 2,000 மேற்பட்ட இளைஞர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர்பி உதயக்குமார், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை விமர்சித்தார். அத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என கூறியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசும்போது, " தமிழ்நாடு அரசு கையாளாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கக் வேண்டிய இந்த நேரத்தில் திமுக அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. தென் தமிழக மக்களுடைய ஜீவாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் குறிப்பாக ஐந்து மாவட்டங்கள் நம்முடைய மதுரை. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார உரிமையாக வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது. அதையெல்லாம் மறந்து மறந்து மக்கள் நலனை அக்கறையில்லாமல் செயல்படுவது வேதனையாக இருக்கிறது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆர்பி உதயகுமார், " ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை, பெண்ணுரிமை கொள்கை என எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு, உள்நோக்கத்தோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை சொல்வதனால் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது. எங்கள் கொள்கை கோட்பாடுகளை அவர்கள் விளக்கம் சொல்லித்தான் தமிழக அரசு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும், ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது" என விமர்சித்தார்.

 மேலும், "அண்ணாமலை பேச்சில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால், வீரம் இருந்தால், நீங்கள் உங்கள் தலைவர்களை சொல்லி உங்கள் செல்வாக்கை சொல்லி, உங்கள் கொள்கைகளை சொல்லி உங்கள் லட்சியங்களை சொல்லி, உங்களது முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்களை சொல்லி, இந்த தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள். மக்கள்எந்த காலத்திலும் பாஜகவுக்கு ஆதரவுகொடுக்க மாட்டார்கள். இதனை தெரிந்து கொண்ட பிறகு தான் ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள அண்ணமலை முயற்சிக்கிறார்" என ஆர்பி உதயகுமார் விமர்சித்தார். 

மேலும் படிக்க | திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News