கூடங்குளத்தில் வட மாநில தொழிலாளியிடம் விற்பனைக்காக வைத்திருந்த 1250 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வட்ட வழங்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் கூடங்குளம் போலீசார் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அணுமின் நிலையத்திற்கு எதிரே பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் (35) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 1250 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை 50 மூட்டைகளாக கட்டி ஆட்டோவில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூடன்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. அதன் பேரில் கூடங்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் முருகன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது டாட்டா ஏசி வாகனத்தில் சுமார் 50 மூட்டைகள் கொண்ட 1250 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விற்பனைக்காக கொண்டு சென்ற அரிசி மூட்டைகளையும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இது குறித்து மளிகை கடை உரிமையாளர் ராகேஷ் குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக வட்ட வழங்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | அடித்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் - கார்த்திக் சிதம்பரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ