Rajnikanth Latest Update: திருச்சி ஸ்ரீரங்கம் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா திரையரங்கில் நடைபெற்ற, ஜெயிலர் திரைப்பட மெகா வெற்றி விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயணராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில், கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை, திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கலீல் மற்றும் நிர்வாகிகள் ராயல் ராஜூ, பூக்கடை சண்முகம், மாரிமுத்து, செக்போஸ்ட் ரஜினி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, சத்திய நாராயண ராவ் செய்தியாளர்களிடம் கூறியபோது, "ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் என்பது மக்கள் ரஜினிக்கு அளித்த பட்டம். அது இனிமேல் யாருக்கும் இல்லை. அவர் இருக்கும் வரை அவர் ஒருவரே சூப்பர் ஸ்டார்.
ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். அவர் மூலம் திரையுலகத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பலன் பெறுகின்றனர். ரஜினி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். விரைவில் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடும் நயன் - விக்னேஷ்! போட்டோ வைரல்
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார். ரசிகர்கள், அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, நல்லவர்களுக்கு ஓட்டுக்களை போட்டு அவர்களை தேர்ந்தெடுக்கலாம்" என்றார்.
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆக. 10ஆம் தேதி வெளியாகி பெரும் வசூலை குவித்துள்ளது. ஜெயிலர் படம் 600 கோடி ரூபாயை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. ஜெயிலர் படத்தில் பல திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதில், ரஜினிகாந்த்தை தவிர அனைவருமே காமியோ கதாப்பாத்திரங்களாகத்தான் வந்து செல்கின்றனர். நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலிற்கு நடனமாடிவிட்டு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்று விட்டார். இருப்பினும், அதிலேயே அவர் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இதில் மாஸ் அதகளம் செய்துள்ளனர். ரஜினியின் பக்கா வில்லனாக விநாயகன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் பெரிய அளவில் சொதப்பியது. அதேபோல், இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட்டும் அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே, ரஜினி - நெல்சன் காம்போ சன் பிக்சர்ஸ் பேனரில் தங்களை மீண்டும் நீருபிக்குமா அல்லது சொதப்புமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அனிருத்தின் இசை முதல் ஜெயிலரின் அத்தனை அம்சங்களும் ரசிகர்களுக்கு பிடித்து போக, கடந்த ஆக. 10ஆம் தேதியில் இருந்து சிறப்பான வரவேற்பை திரையரங்கில் பெற்று வருகிறது.
தொடர்ந்து, ரஜினிகாந்த் ஜெய் பீம் பட இயக்குநர் டி. ஜெ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் 'தலைவர் 170' பட பூஜை நேற்று முன்தினம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகலாம். வரும் செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தனி ஒருவன் 2: வெளியானது மாஸ் முக்கிய அப்டேட்.. இன்னும் 8 மணி நேரத்தில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ