தொற்றுநோய் பரவாமல் தடுக்க மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

Last Updated : Nov 4, 2017, 01:35 PM IST
தொற்றுநோய் பரவாமல் தடுக்க மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்  title=

சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் இன்று (04.11.2017) வடகிழக்கு பருவ மழையினால் பாதித்த பகுதிகளுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 106 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களை துவக்கி வைத்தார். 

அப்பொழுது அவர் பேசியது, வடக்கிழக்கு பருவமழையினால் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனை அடிப்படையில் தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

மழைநீர் தேங்கியுள்ள மற்றும் மழைநீர் வடிந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. வயிற்றுப்போக்கு முதலான தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது பொதுமக்களுக்கு உரிய பொதுவான ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை மருத்துவம் மற்றும் பொது சுகாதார குழுக்கள் உறுதி செய்கின்றன. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 102 மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. டேன்கர் லாரியில் வரும் குடிநீர் கண்காணிக்கப்படுகிறது குடிநீரில் குறைந்தபட்சம் 0.5 பி.பி.எம்(ஞஞஆ) அளவு இருக்குமாறு உறுதிப்படுத்தப்படுகிறது, உணவு ஆய்வு மற்றும் குடிநீர் பரிசோதனைக்காக 90 குழுக்கள் இந்த 6 மாவட்டங்களில் செயல்படுகிறது.

இதை தொடர்ந்து 108 அவசரக்கால ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எந்த நேரமும் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சி இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுடக்குள 106 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களும், மேலும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களை துவக்க வைத்தால் மேலும் எழும்பூர் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் நான்கு மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 

ஒவ்வொரு சிறப்பு மருத்துவ முகாம் வானங்களிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆடீநுவாளர் மற்றும் ஒரு உதவியாளர் என போதுமான அளவில் உள்ள பீளிசிங் பவுடர் உள்ளது. மேலும் இது தவிர சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக 260 சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

Trending News