சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2021, 06:14 PM IST
  • தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • இதனை கட்டுப்படுத்த தமிழ அரசு, மாநிலத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.
  • சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார் title=

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அரசு தப்பில் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள, அமைப்புகள் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ அரசு, மாநிலத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள்ள ரயில்வே நிலையங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில்வே போலீஸார் தானே முன் வந்து சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, பயணிகள் நீராவி பிடிப்பதற்காக ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர் ரயில்வே போலீஸார். 

ரயில் நிலையத்தில், 10 ஆவிபிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மஞ்சள், வேம்பு, துளசி, கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகளை போட்டு ஆவிபிடிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆவி பிடித்த பிறகும், அந்த கருவி முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ள்ளது. 

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆவிபிடிப்பது, மிகவும் சிறந்தது என்றும், இதனால் சுவாச பிரச்சினைகள் நீங்கும் என இயற்கை மருத்துவர்கள் அறிவுறுதியுள்ளதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போல பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளதாக என்று எஸ்பி பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது போல் ஆவி பிடிக்கும் இயந்திரங்களை மற்ற ரயில் நிலையங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | கர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News