புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பதாக, துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 10:45 PM IST
புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை title=

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரியில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பதாக, துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது (Coronavirus) அலை மிகவும் தாக்கி உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும், முழு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, சனி மற்றும் ஞாயிறு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என மாநிலத்தில் உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்த வரிசையில் புதுச்சேரியும் (Puducherry) இணைந்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு (Lockdown) விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ALSO READ | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது.  முழு ஊரடங்கு இல்லாத வார நாட்களிலும் பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். 

பகல் 2 மணிக்கு பின் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள வழிபாட்டு தலங்களில் தேரோட்டம் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளுடன் வழிபாடு செய்ய மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News