பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர்

PTR Palanivel Thiagarajan vs. PM Modi: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் நிலையில், நீங்கள் வந்து எங்களுக்கு என்ன வளர்ச்சியை தரப்போகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 29, 2024, 04:35 PM IST
  • தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்போறீங்களா?
  • எக்ஸ் தளத்தில் டேட்டாவை போட்டு கேள்வி கேட்ட அமைச்சர் பிடிஆர்
  • தமிழ்நாட்டை வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி குறைவு
பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர் title=

பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் டேட்டாக்களை போட்டு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியதுடன், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரமர் மோடி பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கு நிகரான வேகத்தில் தமிழகமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எனது தீர்மானம் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டதில் மதுரைக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை ஒதுக்கியிருக்கிறோம். 

ஏழை மக்களுக்கான மருத்துவச் செலவுக்கான காப்பீடு 5 லட்சம் ரூபாய் மத்திய அரசு கொடுக்கிறது, தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அந்த திட்டத்தில் 50 லட்சம் பயனாளர்கள் இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கூறினார். மேலும், இங்கிருக்கும் மாநில அரசு ஒத்துழைக்காதபோதும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தடையாக இருக்கும் கட்சிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தான் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி

அவர் எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கும் பதிவில், " ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு தனிநபர் வளர்ச்சி விகிதம் 4.43 விழுக்காடு மட்டுமே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு தனிநபர் வருமான வளர்ச்சி 5.54 விழுக்காடாக இருக்கிறது.  2024 ஆம் ஆண்டிற்கு நிதியாண்டு கணக்கிட இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், மார்ச் 31, 2023 ஆம் ஆண்டில் முடிவடைந்த 10 ஆண்டுகளுக்கான நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் தான் இது.

இந்திய சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2011-2012 ஆம் ஆண்டின் ரூபாய் மதிப்பை அடிப்படையாக வைத்து பார்த்தால் கூட 1.3 மடங்கு முதல் 1.44 மடங்கு வரை முன்னோக்கி உயர்ந்து இருக்கிறோம். அதாவது இந்திய சராரசிக்கு மேல் தமிழ்நாடு இப்போதே இருக்கிறது. அப்படி இருக்கையில், தமிழ்நாட்டின் சராசரியை இந்திய சராசரிக்கு கீழே கொண்டு செல்ல யாராவது விரும்புவார்களா?" என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது வளர்ச்சியை பற்றி பேசும் மோடி, இந்திய சாரசரியை தமிழ்நாட்டு சராசரிக்கு உயர்த்த உழைக்க வேண்டுமே தவிர, தமிழ்நாட்டு சராசரியை அதைவிட மோசமாக இருக்கும் இந்திய சராசரிக்கு கொண்டு செல்ல உழைக்க கூடாது, இது தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி இல்லை பின்னடைவு என டேட்டாவுடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

அத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்திருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வளர்ச்சிக்காக உழைப்பதாக சொன்னால் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் இன்னும் வரவில்லை?, தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஏன் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்கிறார்? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

திராவிடக் கொள்கையினால் கிடைத்திருக்கும் மேம்பட்ட கல்வி, பரவலான பகுத்தறிவு சிந்தனை பெற்றிருக்கும் தமிழ்நாட்டு மக்களை பொய்களை சொல்லி ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான விளைவுகளையும் அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News