சென்னை: கடந்த சில நாட்களில் சென்னை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல சம்பவங்கள் நடந்துவிட்டன. அனைத்துக்கும் துவக்கப்புள்ளியாக இருந்தது சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் விடுத்த ஆபாச குறுஞ்செய்தி புகார்.
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் மீது பதிவான பாலியல் தொல்லை புகார்கள் காரணமாக அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை மூன்று நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை முழு வீச்சில் நடந்து வருவதாகவும், பலவித கேள்விகள் ஆசிரியர் ராஜகோபாலனிடம் கேட்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் ராஜகோபாலிடம் நடத்தும் அனைத்து விசாரணையும் மாணவிகள், குறிப்பாக ஐந்து மாணவிகள் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. பல வித கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை அளிக்குமாறு ஆசிரியர் ராஜகோபாலனிடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி
ஆசிரிய ராஜகோபாலனிடம் (Rajagopalan) நடத்தும் அனைத்து விசாரணையும் வீடியொ பதிவு செய்யப்படுகின்றது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை காமராவில் ஜூம் செய்து பார்த்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை ராஜகோபாலன் அளித்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில், ராஜகோபாலன் செய்துள்ள பலவித தகாத செயல்கள், மாணவிகளுக்கு அளித்துள்ள தொந்தரவுகள் ஆகியவற்றை வைத்து பல குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய போலீசார் தயாராக உள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணமான ராஜகோபாலனுக்குஅதிகப்படியான தண்டனையை பெற்றுதர போலீசார் (TN Police) நடவடிக்கை எடுத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகாத செயல்களில் ராஜகோபாலன் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா, அல்லது பள்ளியின் மற்ற ஆசிரியர்களுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி நிர்வாகத்திற்கு இது குறித்த விவரம் ஏற்கவனே தெரிந்திருந்ததா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. ராஜகோபாலனிடம் பல நேரடி கேள்விகளும் கேட்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளில் வந்த காரணம், மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டதன் நோக்கம் என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு வருகின்றன.
ராஜகோபாலனிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடந்துள்ள நிலையில், இன்னும் ஒரு நாள் விசாரணை செய்ய அனுமதி உள்ளது. அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் ராஜகோபாலனை சிறையில் அடைக்கவுள்ளது காவல்துறை. இதுமட்டுமின்றி, ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த தகவலின் பெரில், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியின் பிற ஆசிரியர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுகக்கூடும் என கூறப்படுகின்றது.
காவல்துறை மட்டுமின்றி தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் இந்த வழக்கை தீவிரமாக கையாண்டு வருகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் ராஜகோபாலன், புகார் அளித்த மாணவிகள் ஆகியோர் நேரடியாக ஆஜராகி இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜகோபாலனை விசாரணை செய்த விவரங்கள் வெளிவந்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும் என காவல்துறை வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான குற்றங்களுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ALSO READ: பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR