மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் என பாஜக அமைச்சர் தமிழிசை தெரிவித்துள்ளார்!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை ரூ.15,000 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இங்கு சுமார் 100 மருத்துவர்களுக்கான பணி ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என தமிழக முதவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக பாஜக அமைச்சர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது...!
எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதனையே அறிக்கையாக ஆளுநர் வெளியிட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் எனவும் பாஜக அமைச்சர் தமிழிசை தெரிவித்துள்ளார்.