தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை வெகு விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து விமா்சியைாக கொண்டாடுவது தமிழா்களின் மரபு ஆகும். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளான கருங்காலிகுப்பம், வேட்டவலம், வேடந்தவாடி உள்ளிட்ட பகுதியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ஸ்டாலின் மிக மிக ஆபத்தானவர்... 'அன்றே சொன்னேன்' - ஹெச். ராஜா கதறல்
இந்த பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்டம் தொழில் செய்து வருகின்றனர், தற்போது பொங்கல் பண்டிகைக்கு புதிய பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில் மண்பாண்ட தொழிலாளிகள் பல்வேறு விதமான பொங்கல் பானை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் புதிய அரிசியை இட்டு மக்கள் பொங்கலிடுவது வழக்கம், மண் பானையில் செய்யும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் விற்பனைக்கு தயாராக மண்பானைகள் உள்ளன, மேலும் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் பானை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் வியாபாரம் நடைபெறும் என மண்பாண்ட தொழிலாளர்கள் நம்புகின்றனர், மேலும் தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கி வருகின்றனர், அதனுடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க வேண்டும், இதனால் மண்பானை தொழில் மேம்படும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ