பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்: இன்று முதல் ரேஷன் கடைகளில் பெறலாம்!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

Last Updated : Jan 10, 2018, 01:20 PM IST
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் துவக்கம்: இன்று முதல் ரேஷன் கடைகளில் பெறலாம்! title=

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய தொகுப்பை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இத்திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்திருப்பதையொட்டி, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இன்று இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி 210 கோடி ரூபாய் செலவில், தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 84 லட்சம் பேர் பயனடையும் வகையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைகள், இலங்கை முகாம்களில் உள்ளோருக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

Trending News