பொங்கல் பரிசு 2023: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படம். பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் தொடங்கி வைத்துள்ளார்.
டோக்கன் விநியோகம்
முன்னதாக இதற்கான டோக்கன்கள் விநியோகம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வழக்கப்பட்டது. அத்துடன் இந்நாளில் ரேஷன் கடைகளிலும் தலா 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33,000 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டோக்கன் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள்
அதேபோல் டோக்கன் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் வருகிற 13 ஆம் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு சாரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன கிடைக்கும்?
ரேஷன் கடைப் பயனர்களுக்கு ரூ.1000 ரொக்கம்
1 கிலோ பச்சரிசி
1 கிலோ சர்க்கரை
முழுக் கரும்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி இருந்தால் என்ன செய்வது?
பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி, முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
முக்கிய அறிவிப்பு
* ஜனவரி 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு கிடைக்கும்.
* மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
* 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
* இரண்டு 500 ரூபாய் தாள்கள் வழங்கப்படும்.
* தரமான அரிசி, சர்க்கரையை வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ