சுவர் ஏறி குதித்து பெண்களை மடக்கி மடக்கி கிளிக் எடுக்கும் ஆபாச அரக்கன் - பெண்களே உஷார்!

நெல்லையில் சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 11, 2022, 04:17 PM IST
  • பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞர்
  • தப்பியோட முயன்ற போது வசமாக சிக்கி கொண்ட ஆசாமி
  • செல்போனில் சிக்கிய எக்கசக்க போட்டோக்கள், வீடியோக்கள்
சுவர் ஏறி குதித்து பெண்களை மடக்கி மடக்கி கிளிக் எடுக்கும் ஆபாச அரக்கன் - பெண்களே உஷார்! title=

நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால் ராபின்சன். இவர் பெருமாள்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் சுவர் ஏறி குதித்து பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். இதனால் சமீபகாலமாக காலனி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் பால் ராபின்சன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டில் சுவர் ஏறி குதித்து அவரை படம் எடுத்துள்ளார். 

ஆபாசமாக படம் எடுத்த,ஆபாச வீடியோ

எதிர்பாராதவிதமாக அதை கவனித்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டைச்சுற்றித் தேடுதல் நடத்தினர். அப்பொழுது சுவரேறிக் குதித்து தப்பித்த பால் ராபின்சன், அப்பகுதி இளைஞர்களிடம் வசமாக சிக்கினார். உடனே அவரை பிடித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினரின் விசாரணையில் பால் ராபின்சன் இதுபோன்று தொடர்ந்து பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து ரசித்து வந்தது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிலுள்ள வீடியோ பதிவுகள் மற்றும் போட்டோக்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால் ராபின்சனை விசாரித்து வருகின்றனர். மேலும் வீடியோ எடுப்பதற்காக மட்டும் இவர் சென்றாரா அல்லது வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?

அரசு ஊழியர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் நெல்லை பெருமாள்புரம் பகுதியில் இப்படி ஒருவர் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த இளைஞரின் பையில் ரூ.2 கோடி - எங்கு பிடிபட்டது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News