சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் திலீப் குமார். அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக இவர் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இவரின் தந்தை முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன் காரணமாக திலீப் குமார் தம்பி தண்டபாணிக்கு தந்தை முத்துக்குமாரின் வேலை கிடைத்தது.
ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே குடியிருப்பில் தண்டபாணி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் தம்பியை பார்க்க அவரின் வீட்டுக்கு திலீப்குமார் அடிக்கடி செல்வது வழக்கம் .
அப்போது திலீப்குமாருக்கு, அங்கு குடியிருக்கும் சென்டரல் ரயில்வே காவல் நிலையத்தில் எழுத்தராக இருக்கும் சக்திவேல் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் வேலை பார்க்கும் செல்வகுமார் ஆகியோரின் நட்பு கிடைத்தது.
இவர்கள் அனைவரும் நெருக்கம் ஆனதால் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். அவர்களுடன் திலீப்குமாரின் நண்பர் கோபால் என்பவரும் இருப்பது வாடிக்கை. அவர் வழக்கறிஞராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் மது அருந்தும்போது சக்திவேல் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் தங்களிடம் கஞ்சா இருப்பதாகவும் அதை விற்று தரும்படியும் திலீப்குமாரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு திலீப்குமார் கோபால் மூலம் விற்று தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, சக்திவேலுவிடம் ஒரு கிலோ கஞ்சா இருக்கிறது. அதனை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொடுக்கும்படி செல்வக்குமார் திலீப்பிடம் கேட்டுள்ளார்.
மேலும் வாசிக்க | தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அதன்படி ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனியில் வைத்து சக்திவேலுவிடம் திலீப்குமார் ஒரு கிலோ கஞ்சாவை விற்பதற்காக வாங்கியிருக்கிறார். அதனையடுத்து அயனாவரம் திக்கா குளம் சாய்பாபா கோயில் அருகே நின்று கஞ்சா தன்னிடம் இருப்பதை மொபைல் ஃபோன் மூலம் கோபாலிடம் கூறியுள்ளார்.
இந்தத் தகவல் தெரிந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் தலைமயிலான தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று ஒரு கிலோ கஞ்சாவுடன் திலீப்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின் சக்திவேல் ,செல்வக்குமார் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,போலீசாரால் பறிமுதல் செய்யப்படும், ரயிலில் கடத்தி வரப்படும் கஞ்சாவை சிறுக, சிறுக எடுத்து வைத்து அதை சக்திவேல் விற்க முயன்றதும் அதற்கு உடந்தையாக மற்றொரு காவலர் செல்வகுமார் மற்றும் திலீப்குமார் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வக்குமார், சக்திவேல் மற்றும் திலீப்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR