பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ!

மாப்பிள்ளை அவர்தான் ஆனால் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது என்ற சினிமா வசனம் போல் வண்டி அவனுடையது ஆனால் பெட்ரோல் என்னுடையது என்று சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2022, 10:51 AM IST
  • தமிழகத்தில் பெட்ரோல் விலை அதிகரிப்பு.
  • லிட்டருக்கு 110 என விற்பனை ஆகிறது.
  • இதனால் அதிக திருட்டு சம்பவங்கள் ஏற்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ! title=

பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட சில இளைஞர்கள் இரவு நேரங்களில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்ற வாகனங்களிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | மீண்டும் வலுக்கிறதா கல்லூரி மாணவர்கள் மோதல் ?

சம்பவம் - 1

அரியலூர் நகரில் உள்ள சாம்பசிவம் பிள்ளை தெருவில் ரேஷன் கடை எதிரே உள்ள வீட்டில் இரவு ஒரு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் திருடும் காட்சியை சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த தொடர் திருட்டு காரணமாக இப்குதியிலுள்ள பொதுமக்களை பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்

சம்பவம் - 2

புதுச்சேரியில் நகரப் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் வீட்டின் முன்பு சாலையில் நிறுத்துவது வழக்கம் நிலையில் முத்தியால்பேட்டை நகரில் நேற்று சில நாட்களாக வாலிபர் ஒருவர் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை திருடி தனது பைக்கை நிரப்பினார்.  அருகிலுள்ள மாடி வீட்டில் இருந்து இதை கவனித்த வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடும் நபரை எச்சரித்தார் ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த நபர் பெட்ரோல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

மேற்கண்ட இரண்டு சம்பவங்களின் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமாகவே இதுபோன்ற திருட்டில் சிலர் ஈடுபடுகின்றனர் எனவே காவல் துறையினர் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி பெட்ரோல் திருடும் இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | மலேசியாவுக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News