பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பி தலைமறைவான 4 பேரை சுகாதாராத்துறை தீவிரமாக தேடி வருகிறது!!
பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பிரிட்டனில் (Britain) பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று (CoronaVirus), சாதாரண கொரோனாவைவிட 70 சதவீதம் அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும், இந்த தொற்றால் உடல் நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகமில்லை என்றாலும், அதன் தீவிரமாகப் பரவும் தன்மை உடையது என நிபுணா்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ | கொரோனா வைரஸ் உலகின் கடைசி தொற்றுநோயாக இருக்காது: WHO
இதை தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து தமிழகம் (Tamil Nadu) வருவோரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகம் வருவோர், அவர்களுடன் விமானத்தில் பயணித்தோர், சந்தித்தோர் என 2391 பேரின் பட்டியலை தயார் செய்தது. அதனடிப்படையில் தமிழகம் திரும்பியவர்களை பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 4 பேர், தஞ்சாவூரில் 3 பேர், மதுரை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பிரிட்டன் தொடர்பு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பி தலைமறைவான 4 பேரை சுகாதாராத்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR