சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 11, 2021, 08:26 AM IST
சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள் title=

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அங்கு சமூக இடைவெளி இல்லாமல் ஒரே இடத்தில் மக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

ALSO READ | மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!

இந்நிலையில் சென்னை காசிமேடு (Kasimedu) பகுதிகளில் மீனவர்கள் (Fisherman) பிடித்து வரும் மீன்களை ஏலம் விடுவது, விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மீனவர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். எனவே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குள் முகக்கவசம் அணியாவிட்டால் அனுமதிஇல்லை என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

ஆனால் இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அங்கு சமூக இடைவெளி இல்லாமல் ஒரே இடத்தில் மக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News