ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!

கிட்டதட்ட போதைப் பொருட்களை ஏதோ மளிகை பொருட்களை விற்பனை செய்வது போல செய்து வந்துள்ளார்

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 24, 2022, 04:27 PM IST
  • பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்
  • மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை
  • திட்டமிட்டு கைது செய்த போலீஸ்
ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி! title=

புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் கடந்த வாரம் மெத்தபெட்டமைண் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேறு யாரும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்களா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் படிக்க | ஜாதகத்தை நம்பி 4 மாத குழந்தையைக் கொலை செய்த தாய்! பழனி அருகே கொடூரம்...

இந்த நிலையில் சென்னை  புதுவண்ணாரப்பேட்டை அரசு கலைக்கல்லூரி அருகே மாணவர்கள் கஞ்சா புகைப்பதை கண்ட உதவி ஆய்வாளர் காதர் தலைமையிலான குழு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் அளித்துள்ளனர். 

drugs

அதன் அடிப்படையில் உயர்ரக போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞரை பிடிக்க திட்டம் தீட்டிய போலீசார் போதை மாத்திரைகளை வாங்குவது போன்று செட் அப் செய்துள்ளனர். செல்போன் மூலம் போதை மாத்திரைகள் வேண்டும் எனத் தகவல் கொடுத்து, வாங்குவது போல் சென்று தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஜீவா என்கிற 24 வயது பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Arrested

காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டது. அதில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மேற்கொண்ட பின்பு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் ஆன்லைன் மூலம் கள்ளச்சந்தையில் உயர்ரக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். மெத்தபெட்டமைண், கோடை காளான்கள், வெளிநாட்டு கஞ்சாக்கள், ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி கல்லூரி  மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. கிட்டதட்ட போதைப் பொருட்களை ஏதோ மளிகை பொருட்களை விற்பனை செய்வது போல செய்து வந்துள்ளார். 

Crime news

மேலும் படிக்க | கைலாசாவிலும் கைவரிசை காட்டுகிறார் நித்தி : புகார் அளித்த வெளிநாட்டு பெண்..!

இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதை மாத்திரைகள் உள்ளிட்ட உயர்ரக போதை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஜீவா மீது வழக்கு பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டைபோலீசார் சிறையில் அடைத்தனர்.  சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் காதர் மீரானுக்கு துணை ஆணையாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Trending News