கஜா புயல் நிவாரண நிதியாக DMK அறக்கட்டளை சார்பில் ₹ 1 கோடி....

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி என அறிவிப்பு....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2018, 11:35 AM IST
கஜா புயல் நிவாரண நிதியாக DMK அறக்கட்டளை சார்பில் ₹ 1 கோடி.... title=

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி என அறிவிப்பு....

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கஜா புயலுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தது. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதலவர்எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், புயலில் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படுவதாக திமுக அறகட்டளை அறிவித்துள்ளது. நிவாரண நிதியாக திமுக MLA, MP-க்கள் தங்கள் 1 மாத சம்பளமும் அளிக்கப்படும் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, திமுக அறகட்டளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயல் கனமளையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும்துயரத்தில் மூழ்கியுள்ளனர். 

அந்த அடிப்படையில் மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட, கழகத்தின் சார்பில் 1கோடி ரூபாயும், MLA மற்றும் MPக்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்!" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News