ஓகி தாக்குதலால் கன்னியாகுமரியில் மின்சாரம் இன்றி கன்னியாகுமரி மாவட்டம் தத்தளிக்கிறது. ஓகி புயல் காரணத்தால் மரங்களும், மின்சார கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மாவட்டமே மின்சாரம் இன்றி தத்தளிக்கிறது. இரவில் மெழுகுவர்த்திகள் மூலமாக மக்கள் சமாளித்து வருகிறார்கள்.
தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதை அடுத்து கடந்த 3 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து இதுவரை 400 பேர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் மின் இணைப்புகளை சரி செய்ய சுமார் 4000 களப் பணியாளர்கள் வர வைக்கப்பட்டி உள்ளனர். தற்போது கன்னியாகுமரி நகரத்தில் மின் இணைப்புகளை சரி செய்து வருகின்றனர்.
#Electricity #restoration works under full swing in #Kanyakumari with more than 4000 manpower mobilised from other districts #CycloneOckhi #KanyakumariRains pic.twitter.com/p9hNuZb6Qt
— TN SDMA (@tnsdma) December 3, 2017