நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும், ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய திமுக தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இஸ்லாமியர்களுக்காக போராடுவது இனத்தின் பிரச்சனை எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமியர்களை சிறைபடுத்தியது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் எனத் தெரிவித்தார்.
ALSO READ | "மாரிதாஸ் வாழ்க" என நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த நபர் - காவல்துறை விசாரணை
தொடர்ந்து பேசிய அவர், " இஸ்லாமிய தீவிரவாதி என்ற வார்த்தையை முதன்முதலில் சட்டப்பேரவையில் பயன்படுத்தியவர் கருணாநிதி. தா. கிருட்டிணன், லீலாவதி கொலையாளிகளை விடுதலை செய்யவதற்காக கொண்டு வந்த அரசாணையில் ஏழு பேர் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொருந்தாது எனக் குறிப்பிட்ட திமுக அரசு, அவர்களை விடுதலை செய்யும் என்று எப்படி நம்ப முடியும்?. டி.ஆர். பாலு, முரசொலிமாறன் ஆகியோர் குஜராத் படுகொலையை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியவர்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டவர் மு.க.ஸ்டாலின். அவருடைய அறிக்கையும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தது.
ALSO READ | யூடியூபர் மாரிதாஸ் கைது - காரணம் என்ன?
தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். கொளத்தூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுக் கலைக்கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று திமுக அரசு அறிவித்தது தான் இந்துத்துவம். அதை எதிர்த்து குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். காஷ்மீரை பிரித்ததில் என்ன தவறு என கேள்வி எழுப்பியவர் ஸ்டாலின். ஏழு தமிழர் விடுதலை மற்றும் இஸ்லாமியர் விடுதலை குறித்து பேசி வாக்குகளை பெற்ற திமுக, அந்த நன்றிக்கடனுக்காகவாவது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR