3 வார்டில் போட்டியிட்டு 15 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி சார்பில் காரமடை நகராட்சியில் 3 வார்டுகளில் ஒரே வேட்பாளர் போட்டியிட்டது தெரியவந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2022, 01:02 PM IST
  • நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு
  • 3 வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
  • மிக மிக சொற்ப வாக்குகள் மட்டுமே பதிவு
3 வார்டில் போட்டியிட்டு 15 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் வேட்பாளர் title=

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றுள்ளன. அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட கொங்கு மண்டலத்தில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியை திமுக பதிவு செய்துள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் 153 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளில் கம்பீரமாக வெற்றியை பதிவு செய்துள்ள திமுக, 21 மாநகராட்சிகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஹாட் பாக்ஸ், கொலுசு, சிசிடிவி, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை கேள்வி

அதிமுக படுதோல்வியை சந்தித்தாலும் ஒரு சில இடங்களில் கனிசமான வெற்றியை பதிவு செய்து 2வது இடத்தை பிடித்தது. குறிப்பாக, அதிமுகவின் தலைவர்களாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோருக்கு சொந்தமான பகுதிகளிலும் கூட திமுக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

திமுகவின் இந்த அசுர வெற்றிக்கு இடையே தேமுதிக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவாகியுள்ளது. குமரியில் ஒரு சில இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. 

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர், 3 வார்டுகளில் போட்டியிட்டதும் தெரியவந்துள்ளது. காரமடை நகராட்சியில் வார்டு எண் 1-ல் போட்டியிட்ட சைமன் சுந்தர்ராஜ் என்பவர், 2 மற்றும் 3வது வார்டுகளிலும் போட்டியிட்டுள்ளார். 3 வார்டுகளிலும் முறையே அவர் 6,8,1 என்ற ஓட்டுகளை பெற்றுள்ளார். 

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News