திமுக-வை யாராலும் அழிக்க முடியாது; கடலூர் கூட்டத்தில் MK ஸ்டாலின்!

திமுக-வை யாராலும் அழிக்க முடியாது, திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போன வரலாறு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 29, 2019, 10:06 PM IST
திமுக-வை யாராலும் அழிக்க முடியாது; கடலூர் கூட்டத்தில் MK ஸ்டாலின்! title=

திமுக-வை யாராலும் அழிக்க முடியாது, திமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போன வரலாறு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக-வை மாபெறும் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் திமுகவினர் தான் என்ற வகையில் நம் தொண்டர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

நாற்பதும் நமதே என்ற முழக்கத்துடன் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம். தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி என்பது சாதாரணமானதல்ல, பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. இந்த வெற்றிக்காக நன்றி சொல்லவே தாம் தற்போது கடலூருக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டு பேசினார்.

மேலும் திமுக தலைமையிலான கூட்டணி அரசியல் லாபத்திற்காக அமைந்த கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்யும் கொடுமைகளை உரிய ஆதாரத்துடன் மக்கள் மன்றத்திற்கு எடுத்து சென்றோம். தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் அதிமுக தலைமையிலான அரசு கவிழும் இது உறுதி என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்த அவர். 

தமிழகத்தில் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வராததால், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன திமுக கூட்டணியின் வெற்றியால் நம் தாய்மொழியாக இருக்க கூடிய செம்மொழியான தமிழ் நாடாளுமன்றத்தில் ஒலித்தது. 

பாராளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக திமுக எம்.பிக்கள் உள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் நிலவுவது தண்ணீர் பற்றாக்குறையே பஞ்சம் அல்ல என புது விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு, லாரி லாரியாக தண்ணீர் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுவது எதற்கு எனவும் கேள்வி எழுப்பினர். 

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் கூறுகின்றார். தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். 

தலைநகர் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விடும் என திமுக பலமுறை சட்டமன்றத்தில் எச்சரித்தும், தமிழ அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆளும் அரசு மீது குற்றம்சாட்டினார்.

Trending News