அனிதாவின் மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாணவர்கள் வகுப்பு புறகணிப்பு போராட்டம் நடத்த போவதாக செய்திகள் பரவிவந்த நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லுரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
Tamil Nadu: Students protest outside Chennai's Loyola College demanding cancellation of #NEET. pic.twitter.com/ZuEzt3ca2K
— ANI (@ANI) September 5, 2017
Tamil Nadu: Student federations protest outside Chennai Central railway station demanding the cancellation of NEET and justice for #Anitha. pic.twitter.com/m1xtSSk22D
— ANI (@ANI) September 5, 2017
நீட் தேர்வினை ரத்து செய்யவேண்டும் என்பது இவர்களது கோரிக்கைக உள்ளது.
அனிதா:-
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்த தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.