காலணா முதல் 10 காசு வரை.....கைலாசா நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தாம் ஏற்கனவே கூறிய கைலாசாவின் நாணயங்களை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Aug 23, 2020, 08:34 AM IST
    1. சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறிய கைலாசாவின் நாணயங்களை வெளியிட்டுள்ளார்.
    2. இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    3. பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்து உள்ளார் நித்யானந்தா.
காலணா முதல் 10 காசு வரை.....கைலாசா நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா title=

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தாம் ஏற்கனவே கூறிய கைலாசாவின் நாணயங்களை வெளியிட்டுள்ளார்.

ஆன்மீக குரு என்றும் அறியப்பட்ட சுவாமி நித்தியானந்தா பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்தார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. நித்தியானந்தாவின் பீடத்திற்கு உலகம் முழுவதும் 50 நாடுகளில் கிளைகள் உண்டு. 

 

ALSO READ | விக்கிப்பீடியாவைப் போல தான் நித்தியானந்தப்பீடியா என்று அறைகூவும் நித்தியானந்தா....

மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, பிறகு மக்களின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டார். இது மட்டுமல்ல, இதைப்போன்ற பல சர்ச்சைகளின் நாயகராக இருப்பவர் நித்தியானந்தா.செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதை அடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. அதனைத் தொடர்ந்து ஆசிரமம் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் முதல்வர், சதானந்த கவுடா ஆசிரமத்தை மூடுவதற்கு உத்திரவிட்டார்.

நித்தியானந்தாவை கைது செய்யவும், அவரது ஆசிரமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது, அவர் தலைமறைவானதாக செய்திகள் வந்த நிலையில், ராமநகரம் அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனார். நீதிமன்றம்,  ஜாமீன் வழங்கியது. அவர் ஜாமீனில் விடுதலையான சிறிது நேரத்தில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்த உள்மாநில பாதுகாப்பு போலீசார், நித்தியானந்தரை மீண்டும் கைது செய்தனர். பிறகு ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, மதுரை ஆதினத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டு, பிறகு வெளியேற்றப்பட்ட விவகாரம் என பல விவகாரங்களில் சிக்கியவர், சாமியார் என்று சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வந்தார் நித்தியனந்தா. இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.  இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக அவரை போலீஸ் தேடிவருகிறது. குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் என பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார். கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்ல, அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக வதந்திகள் உலா வந்தன. அந்த நாட்டிற்கு தனி மத்திய வங்கி, தனி கரன்சியும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நித்தியானந்தா.

 

ALSO READ | நித்யானந்தாவின் சீடர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை! Facebook-ல் லைவ்!!

இந்தியாவில் இருந்த வரைக்கும் நித்தியானந்தா தினம் தினம் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். இதற்கிடையில் நித்தியானந்தா, ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

யுட்யூப் சேனலில் தினம் தினம் வீடியோ போட்டு எல்லோரையும் அலற வைத்தார். திடீரென கடந்த வாரம் கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் விநாயகர் சதுர்த்தியன்று அதனை 2 முறையாக அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்

அதன்படி நாணயமாக கைலாசா நாட்டிற்கான புதிய தங்க காசுகளை அறிமுகம் செய்துள்ளார். அந்த காசுகள் அடங்கிய போட்டோ போட்டு போஸ் கொடுத்துள்ளார் நித்தியானந்தா. பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்து உள்ளார் நித்தியானந்தா.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

THE KAILASHIAN DOLLARS! #Nithyananda #Kailasa #Hindus #Revival #ReserveBankOfKailasa #HinduCurrency

A post shared by Sri Nithyananda Paramashivam (@srinithyananda) on

 

 

இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல 2டாலர், 3 டாலர், 4 டாலர் 5 டாலர், 10 டாலர் ஆகிய நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Trending News