நீலகிரி மாவட்டம் (Nilgiri) கொடநாடு (KodaNadu) எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது.அதில் காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.பின்பு இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் சயான், வாளையாறு , மனோஜ் , சந்தோஷ் சாமி , தீபு , சதீஷன் , உதயகுமார் , ஜித்தின் ஜாய் , ஜம்சீர் அலி , மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் தமிழகத்தில் நடந்த தேர்தலில் ஆளும் திமுக (DMK) அரசு பெரும்பாண்மை பலத்துடன் வெற்றி பெற்றது.அப்போது தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு சம்பந்தபட்ட நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்று அறிவித்தனர்.அது போலவே இந்த வழக்கு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ : நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்
.இதற்கிடையில் கொடநாடு எஸ்டேட் மேல் தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் ஒன்று பறப்பதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரின் பேரில் சோலூர் மட்டம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.பின்பு அவர்களின் விசாரணையில் "அரசு கேபிள் நிறுவனம் ட்ரோன் கேமாராக்களை இயக்கியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அந்நிறுவன ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா (Innocent dhivya) உத்தரவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது :
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களால் கொண்டாடப்படும் பலதரப்பட்ட விழாக்களான திருமணம், காதணி விழா, பெயர் சூட்டு, நீராட்டு விழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் சமீபகாலமாக புகைப்படங்கள் எடுப்பதற்காக உள்ளரங்க பறக்கும் புகைப்படக் கருவியான ட்ரோனை அனுமதியின்றி உபயோகிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளில்லா பறக்கும் கருவிகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சில முக்கிய தருணங்களில் மட்டும் பறக்கும் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முன் அனுமதி பெற்ற பின்தான் இயக்க வேண்டும். விதிமுறைகளை மீறிப் பயன்படுத்தப்படும் கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, இனிவரும் காலங்களில் பறக்கும் புகைப்படக் கருவிகள் ட்ரோன் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ALSO READ : பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்! தமிழக அரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR