தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதிய பதவி!

Last Updated : Sep 16, 2017, 09:36 AM IST
தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதிய பதவி! title=

மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர், கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அதில் வெற்றிபெறவில்லை. 

தற்போது, நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்திவருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜனை நியமித்துள்ளது, மத்திய அரசு.

Trending News