புதிய தேசிய கல்வி கொள்ளை தான் எதிர்காலம் - கவர்னர் ஆர்என் ரவி

சுதந்தத்திற்க்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத் தில் இருந்த நாம் 11ம் இடத்திற்க்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்திற்க்கு முன்னேறி உள்ளோம் - கவர்னர் ஆர்என் ரவி  

Written by - RK Spark | Last Updated : May 27, 2024, 11:47 AM IST
  • உலகம் வேகமாக மாறி வருகிறது.

    நமது நாடு பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது.
  • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தகவல்.
புதிய தேசிய கல்வி கொள்ளை தான் எதிர்காலம் - கவர்னர் ஆர்என் ரவி title=

மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைக்கிறார். ஆராய்ச்சியின் சிறப்பம்சமாக, நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் குறித்த விரிவான விவாதங்கள், விளக்கங்களை மேற்கொள்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என்.ரவி, அவர்கள்  மாநாட்டின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் தலைமையுரையாற்றயுள்ளார்கள். 

மேலும் படிக்க | உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?

மாநாட்டின் போது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் "பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்" என்ற தலைப்பில் விளக்கங்களை வழங்குவார்கள். இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்த மாநாட்டில் கல்வித்துறையில் தேவைப்படுகிற முக்கிய மாற்றங்கள் குறித்து கவர்னர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.

இது குறித்து கவர்னர் பேசுகையில், "உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்தத்திற்க்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத் தில் இருந்த நாம் 11ம் இடத்திற்க்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5ம் இடத்திற்க்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3 இடத்திற்க்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையோந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவரவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதில்காலம் கேள்விகுறியாகிவிடும். 

நாம் சுதந்திரத்திற்க்கு முன்பு உலகின் பெரும் பொருளதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்க்கு காரணம் அப்போது பின்ப்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். திருவள்ளுவர் கற்பித்தல் குறித்து கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்" என்றார்.

மேலும் படிக்க | கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News