NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குக்கோரும் மசோதாவை, சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்புள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2022, 05:58 PM IST
  • நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்
  • பிப்ரவரி 1 ஆம் தேதி சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்
  • அதே மசோதாவை திருப்பி அனுப்புவோம் என திமுக தெரிவித்துள்ளது
NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் title=

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. இந்த கமிட்டி கொடுத்த பரிசீலனைகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கோரும் மசோதாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது கொண்டு வந்தார்.

ALSO READ | முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

பா.ஜ.கவைத் தவிர அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஒருமனதாக ஆதரவு அளித்தனர். இதனையடுத்து தமிழகத்துக்கு நீட் விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கடந்த 4 மாதங்களாக இந்த மசோதாவின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனையை எழுப்பினர். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள ஆளுநர், குறைகளுடன் இருக்கும் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி வில்சன், ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மீண்டும் அவருக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.  

ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News