தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
இதனால், தற்போது நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து உறுதியாக கூறமுடியாது என மழுப்பினார்.