‘நீட்’தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பரிசீலனை -பிரகாஷ் ஜவடேகர்

Last Updated : Mar 3, 2017, 03:41 PM IST
‘நீட்’தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பரிசீலனை -பிரகாஷ் ஜவடேகர் title=

நீட் தேர்வு விலக்கு பரிசீலிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினார். 

அவர் கூறியதாவது: 

உயர் கல்வித்துறையில் உத்தேசிக்கப்பட்டு உள்ள நீட் தேர்வு முறை அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது.

மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

Trending News