விஜய்லட்சுமி என்ன அன்னை தெரசாவா...? - கொந்தளித்த சீமான்

Seeman Latest News: விஜயலட்சுமி யார் அன்னை தெரசாவா என்றும் எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண ஆயிருந்தால் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 3, 2023, 02:16 PM IST
  • காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸிற்கு திமுக ஆதரவு அளிக்கிறது - சீமான்
  • பாஜக இந்தியா நாட்டை பிச்சைகாரர் நாடாக ஆக்கிவிட்டது - சீமான்
  • தனி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தான் நாம் தமிழர் கொள்கை - சீமான்
விஜய்லட்சுமி என்ன அன்னை தெரசாவா...? - கொந்தளித்த சீமான் title=

Seeman Latest News: கோவை ராமநாதபுரத்தில் தனியார் அரங்கில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. குறிப்பாக, இந்த கூட்டம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,"பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. மேலும் டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்களில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். தனி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தான் நாம் தமிழர் கொள்கை. மக்கள் எதிர்பார்ப்புக்காக தேர்தலில் நாம் தமிழர் தனித்து நிற்கும்.

எதற்கு சந்திரயான்?

37% அண்ணாமலை தனித்து நின்று வெற்றி பெறட்டும், ஏன் கூட்டணி வைத்துள்ளார். அண்ணாமலை தான் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறார். வயிறு காய்ந்து இருக்கும் போது வானில் சந்திரயான் எதற்கு.  இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும் எனக் கூறினார்.

எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் ஆயிருந்தால் அந்த புகைப்படத்தை வெளியிட வேண்டும். பல லட்சம் பேர் என்னோடு போட்டோ எடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. முதலில் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரியில் தண்ணீர் வாங்க தர வேண்டும்.

மேலும் படிக்க | 'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?

'தமிழ் தேசியமே எனது கொள்கை'

ரபேல் விமானத்தை ஏன் பிரான்சில் வாங்குகிறார்கள்?, அதே பிரான்ஸ் நாட்டினர் மற்ற நாடுகளுக்கும் விமானத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதில் இந்தியா ராணுவம் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார். சந்திரனில் முதலில் யார் குடியரப் போவது இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்துவரா? 

திமுக, அதிமுக உடன் நடப்பது பங்காளி சண்டை. அண்ணன், தம்பி சண்டை. ஆனால் இதில் பாஜக எதற்கு தலையீடுகிறது. பாஜக இந்தியா நாட்டை பிச்சைகாரர் நாடாக ஆக்கிவிட்டது. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய கொள்கை. சாதி, மத உணர்வு சாகும் போது தமிழ் இனம் தானாக வளரும். மொழி பற்று இனப்பற்று வரும்போது சாதி பற்று மறைந்துவிடும். 

விஜயலட்சுமி யார் அன்னை தெரசாவா?, எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண ஆயிருந்தால் புகைப்படத்தை வெளியிட வேண்டும். அவர் 2013ஆம் ஆண்டில் புகார் அளித்தார். பின்னர், விஜயலட்சுமி எங்க போனார். அதன் பிறகு, 2021ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தற்போது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வர 6 மாதங்களுக்கு முன்பும் பிரச்சனை ஏற்படுத்துகிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து...

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட்டால் திமுக தைரியம் இருந்தால் உதயசூரியன் போட்டியிட்டால் நான் அங்கு வேட்பாளராக போட்டியிட மாட்டேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ஒரே கல்வி கொள்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் காவிரியில் இருந்து முதலில் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்தால் கும்பிடுவேன்.

1969ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ் தேவையில்லை என்று கூறினார்கள். அப்படியென்றால் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு குடியுரிமை உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரஸ் இலங்கையில் தமிழினத்தை அளித்தது. பாஜக 2ஜி பிரச்னைக்காக ஒரு நாள் நாடாளுமன்றத்தை முடக்கியது. ஆனால் இலங்கையில் தமிழின மக்கள் அளித்த போது யாரும் குரல் கொடுக்கவில்லை" என்றார். 

மேலும் படிக்க | 'ஒன்றிய அமைச்சர்' எம்.பி., சொன்ன ஒரு வார்த்தை... அலறிய பாஜக தொண்டர்கள் - என்ன பிரச்னை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News