நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அஞ்சலி மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பாகத்தில் டிவிட் பதிவிட்டு உள்ளார் அதில்,
தென்காசி அருகே கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
இது போன்ற கொடுமைகள் நம் மக்களுக்கு நடக்க கூடாது என்பதற்காக தான் நம் பாரத பிரதமர் முத்ரா வங்கி திட்டத்தை கொண்டுவந்தார், எந்த வித உத்திரவாத ஆவணங்களுக்கு வற்புறுத்தல் இல்லாமல் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ள இத்திட்டம் நம் மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும், இந்த கந்து வட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நமது மத்திய அரசின் எளிய கடன் வசதிகளை பயன்படுத்துவோம்.
நெல்லை அருகே கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. pic.twitter.com/rRDK09Psj2
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 23, 2017
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.