குரங்கு அம்மை, அறிகுறிகள் என்ன; தமிழக அரசு அவசர அறிவிப்பு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2022, 07:23 AM IST
  • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை
  • குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன
  • 12 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு
குரங்கு அம்மை, அறிகுறிகள் என்ன; தமிழக அரசு அவசர அறிவிப்பு title=

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில் 92 பேருக்கு மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. குரங்கு அம்மை என்பது குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோயாகும். குரங்கு அம்மை வைரஸ் என்பது போக்ஸ்விரிடே குடும்பத்தின் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை டிஎன்ஏ வைரஸ் ஆகும். 

மேலும் படிக்க | Health Alert: அளவுக்கு மிஞ்சிய ஆலுவேரா ஏற்படுத்தும் பாதிப்புகள்

இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன.  இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் இது வரை கேமரூன் நாட்டில் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. நோய் பாதித்தவர் அணிந்திருந்த ஆடைகள் மூலமாகவும் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, களைப்பு, உடல் அரிப்பு, தோலில் புள்ளிகள், கொப்பளங்கள் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

நோய் பாதிப்பு தெரிய 7 முதல் 14 நாட்கள் வரை ஆகும். ஆர்டிபிசிஆர் மாதிரிகள், கொப்பள நீர், ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதனை செய்யும்போது இந்நோயை கண்டறிய முடியும். குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.

பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு
இதற்கிடையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை
இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றும் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் மட்டும் பரவிய குரங்கு அம்மை தற்போது ஆஸ்திரேலிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Raw Milk: பசும்பால் குடிப்பது நல்லதா, கெடுதலா; ஷாகிங் உண்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News