வங்கிக்கணக்கில் ரூ.,15 லட்சமா? இது எப்போ? தமிழிசை!!

Last Updated : Sep 27, 2017, 09:39 AM IST
வங்கிக்கணக்கில் ரூ.,15 லட்சமா? இது எப்போ? தமிழிசை!! title=

குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.,15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் ரூ.,15 லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், மோடி  ஒவ்வொரு வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி கூறியதாக மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழசை தனது டிவிட்டறில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவை குறிப்பிடப்பட்டு, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் ரூ.,15 லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்று தான் பிரதமர் மோடி கூறினார்.

இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.,15  லட்சம் போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News