அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் செல்போனில் கருவறையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருவதால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு வருவதற்கான தடையை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் இன்று அக்டோபர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடையானது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லும் முன் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையத்தில் செல்போன், கேமிரா கருவிகளை பிரத்யேகமாக அமைக்கபட்ட பாதுகாப்பு அறையில் 5 ருபாய் கட்டணம் செலுத்தி வைத்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் செல்போன் வைப்பதற்கான அறைகள் அமைக்கப்பட்டும் அதற்கான பிரத்தியேக பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் கொண்டு வரும் பக்தர்கள் கணினி மூலம் ரூ. 5 கட்டணம் செலுத்தி புகைப்படத்துடன் கூடிய ரசீதினை பெற்று செல்லவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. அதற்கான தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யபட்டு ரசீது வழங்கபடுகிறது. இந்த புதிய நடைமுறை பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணுவதற்காகவே கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கோவில்களில் போன் டெபாசிட் லாக்கர்களை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
சுப்ரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை கோரிய மனுவை தொடர்ந்து உயர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொபைல் போன்கள் மக்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், சுவாமி படங்களை போட்டோ எடுப்பதும் ஆகம விதிகளை மீறுவதாகவும் மனுதாரர் வாதிட்டார். புகைப்படம் எடுப்பது கோயில்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறினார், மேலும் பெண்கள் தங்கள் அனுமதியின்றி தங்கள் படங்களை கிளிக் செய்வதால் பயப்படுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் ஆகியவற்றில் மொபைல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் கோவிலிலும் மொபைல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ