திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jan 4, 2017, 10:04 AM IST
திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு title=

சென்னை: திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்ந பொழுக்குழு கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி, குமரிமுத்து, சற்குணபாண்டியன், சோ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

திமுக பொதுக்குழுவுக்கு கட்சித் தலைவர் கருணாநிதி வருகை தராதது அக்கட்சி நிர்வாகிகளை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. 

திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் 3,000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இப்பொதுக் குழுவுக்கு உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் தலைமையில் இன்றைய பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவில் கருணாநிதி பங்கேற்காதது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த 48 ஆண்டுகளில் முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Trending News