இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்ததை அடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள். மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இதைக்குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறிகையில், தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடைபெறமால் இருக்க, தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உடனடி உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.
#TamilNadu: DMK Working Pres MK Stalin urges Guv C Vidyasagar Rao to immediately direct CM E Palaniswami to prove majority in the Assembly. pic.twitter.com/trpIgTkPBQ
— ANI (@ANI) August 25, 2017