பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன் - சௌமியா தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி குலி தோண்டி புதைத்துள்ளனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உசிலம்பட்டி DSP ராஜா தாசில்தார் செந்தாமரை மற்றும் போலிசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, குழந்தையைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறைக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தையை கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது... "கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் #பெண்குழந்தைகள்பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.
கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் #பெண்குழந்தைகள்பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) March 6, 2020
இதை தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மேலும் ஒரு டிவிட்டில்.... "பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது. மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.