அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உத்தரவு

"அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 4, 2021, 02:15 PM IST
  • அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படியான நடவடிக்கை.
  • திடீரென உள்ளே புகுந்து திமுகவினர் அம்மா உணவக ஊழியர்களை மிரட்டினர்.
  • பெயர் பலகை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பெயர் பலகையை வைக்கப்பட்டது.
அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உத்தரவு  title=

சென்னை: ஏழை மக்களின் பசியை போக்கி வரும் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகத்தை (Amma Unavagam) திமுக-வை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சி யை ஏற்ப சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மதிய உணவை தயார் செய்து கொண்டிருக்கையில் திடீரென உள்ளே புகுந்து திமுகவினர் (DMK) அம்மா உணவக ஊழியர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அங்கிருந்த காய்கறி மற்றும் உணவுகளையும் வீசி எறிந்துள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த அராஜகத்தை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் ட்வீட் மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

 

ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுக தலைவரும், தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலின் (MK Stalin) , "அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகரிகளுக்கு அறிவுறுத்தியதோடு, அவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து, மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் (Amma Canteen) பெயர் பலகை அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பெயர் பலகையை அதே இடத்தில் வைக்கப்பட்டது.

Amma Unavagam in Chennai

Amma Unavagam

ALSO READ |  மே 6 முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News