பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Udayanidhi Stalin: விருதுநகரில் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2024, 06:50 PM IST
  • விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
  • அமைச்சர் உதயநிதி இழப்பீடு வழங்கினார்
  • அரசு வேலையில் முன்னுரிமை என வாக்குறுதி
பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் title=

சாத்தூர் அருகே குண்டாயிருப்பு பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு அறுதல் தெரிவித்து, நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

மேலும் படிக்க | வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா... தொல்.திருமாவளவன் கேள்வி..!!

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ரகுராமன், மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " நேற்று ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்ததினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். அவர்களுக்கு இன்று அதற்கான காசோலை வழங்கினோம்.

தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் இரண்டு லட்சத்து ஐயாயிரம் வழங்கப்பட உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவித்தார். 

இந்த வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளர் ஜெயபால் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட இருவரை ஆலங்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலையின் உரிமையாளர் விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News