உண்மைக்கு மாறாக பேசுகிறார் அமைச்சர்: தங்கர்பச்சான் காட்டம்

சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 02:33 PM IST
உண்மைக்கு மாறாக பேசுகிறார் அமைச்சர்: தங்கர்பச்சான் காட்டம் title=

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் (Electricity Bill) குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப் பின் மன்னிப்பு கோருவதாகவும், இரண்டாவது முறையாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதிலளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதிலளிக்க மறுக்கின்றார்.

ALSO READ | மின் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு புகார்; நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்த்துக்கோரி அல்ல மாதாந்திர மின் மின் கட்டண முறையை செயல்படுத்தாதினால்தான் மின் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது என்பது குறித்துதான்.

 

 

முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும், திமுக தேர்தல் அறிக்கையிலும், மக்களிடத்திலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கிறேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் பிரச்சனை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்போதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்’ என ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கையில் கூறியுள்ளார்.

ALSO READ | Electricity Board மின் கணக்கீட்டுக்கு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் முறை: செந்தில் பாலாஜி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News