தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடும் சூழல் - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2022, 12:38 PM IST
  • புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படாது
  • கல்லூரிகளை மூடும் சூழல் தமிழகத்தில் உள்ளது
  • அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் விளக்கம்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடும் சூழல்  - அமைச்சர் பொன்முடி title=

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுமா? என்ற சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக திருப்பூரில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் உயர் கல்வி தேவையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதாக கூறினார். 

மேலும் படிக்க | பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி 

அமைச்சர் பொன்முடி கொடுத்த விளக்கத்தில், " திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்க அவசியம் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்க கூடிய  கல்லூரிகள் மாணவர்களின் உயர் கல்வியை தேவையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருக்கிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி கட்டியுள்ளவர்கள் அதை மூடி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 6 சுயநதி பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1 லட்சத்து 28 ஆயிரம் இடம் நிரம்பியுள்ளது. 72 ஆயிரம் காலியாக உள்ளது. வரும் காலங்கள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ’நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் அறிவித்து பொறியியல் கல்லூரிக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க  தொழில் முனைவோர்களிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு பணிகள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

வரும் காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரும் காலங்களில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்"  என தெரிவித்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News