SC உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் DMK-க்கு சரியான குட்டு வைத்துள்ளது: ஜெயக்குமார்!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 11, 2019, 04:55 PM IST
SC உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் DMK-க்கு சரியான குட்டு வைத்துள்ளது: ஜெயக்குமார்! title=

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

உள்ளாட்சி தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள், உச்சநீதிமன்றத்தில், மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. 

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுகவுக்கு சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இதைத் தான், தங்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்துவதாக திமுக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என்றும், புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்...  உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவதை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு சிறிதும் பாதிப்பு தராது எனது உள்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கி விட்டார். இரட்டை குடியுரிமை இருப்பதில் தவறில்லை என்பதை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். நடிகர்கள் விளம்பரத்திற்காக சில கேள்விகளை முன்வைப்பார்கள். அவர்களுக்கு பதிலளித்து அவர்களை பெரிய ஆள் ஆக்க நான் விரும்பவில்லை. உள்ளாட்சி தேர்தலை என்னென்ன ஓட்டடைகள் உள்ளது என்பது பற்றி திமுக ஆராய்ந்து வருகிறது.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் திமுக கூட்டணிக்கு சரியான குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளன என அவர் தெரிவித்தார்.  

 

Trending News