தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றியது அதிமுக!

மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 23, 2019, 05:46 PM IST
தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றியது அதிமுக! title=

மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்க விழா, கல்வி தொலைக் காட்சிக் கான செட்-டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் பேட்டை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்பு களை திறந்து வைத்து பள்ளிக்கு கல்வி தொலைக் காட்சிக்கான செட்-டாப் பாக்சினை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது நிகழ்ச்சியில் உரையாற்றியா அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவிக்கையில்.,  ஏழை குழந்தைகளில் கல்வி எவ்விதத்திலும் தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது நம் அரசு.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும், ஏழை எளிய கிராமப்புற குழந்தைகளும் அடிப்படை கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்திய அளவில் தமி ழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கியிருக்கின்றார். கல்வியில் கிராமப்புற மாணவ மாணவியர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விலையில்லா சீருடை, விலையில்லா நோட்டு புத்தகம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டிகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை ஜெயலலிதா அவர்கள் உருவாக்கி தந்தார். அவர்கள் வழிவந்த தமிழக அரசு அந்த திட்டங்களையெல்லாம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது" என குறிப்பிட்டு பேசினார்.

Trending News