தென் மாவட்டங்களிலும், வடக்கு உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
வெப்பச்சலனம் காரணமாக கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், குறிப்பாக தென் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 9 செண்டி மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 8 செண்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.