நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்!

ஆடி மாதத்தை முன்னிட்டு  சமூக வலைதள பிரபலமான அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் அவரது பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Aug 16, 2022, 01:23 PM IST
  • அன்னபூரணி அரசு அம்மா ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக சொற்பொழிவு.
  • ராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம்.
  • சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பலரால் கலாய்க்கப்பட்டார்.
நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்! title=

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்ற பெண் சாமியார் பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். பட்டுப்புடவை, நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க, இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அதன்பின்னர் தான் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்தது. 

அதன் பின்னர் இவரை பலரும் கலாய்த்து பதிவிட்டு வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் ஆன்மீக கூட்டங்களை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மன் வேடத்தில் புல் மேக்-அப்பில் தோன்றினார். அவருக்கு அவரது பக்தர்கள் கற்பூரம் காட்டியும், பாத பூஜை செய்தும், மலர் பூஜை செய்தும் வழிபட்டனர். 

annaporani

மேலும் படிக்க | மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!

தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக் கூறி, பக்தர்களுக்கு இவர் ஆசி வழங்கி வருகிறார். இதை தொடர்ந்து யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். நித்தியானந்தாவும் முதலில் திருவண்ணாமலையில் தான் ஆசிரமம் நடத்தி வந்தார். பின்னர் அவர் மிகப்பெரிய ஆளாக வளர்ந்தார். ஒருவேளை அன்னபூரணி அம்மாவும் அவர் வழியில், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துள்ளார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

மேலும் படிக்க | சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News