மேகதாது விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம்!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2018, 08:21 AM IST
மேகதாது விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!  title=

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம்!  

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய ஆணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. 

இதை தொடர்ந்து, மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் கூட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வருகிற 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

6-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற  திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக வருகிற 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கூடும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் மட்டுமே விவாத த்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

Trending News